திமிங்கில அம்பருடன் இருவர் கைது
திமிங்கிலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட போது இருவர் புத்தளம் – கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து நேற்று முன்தினம் (27) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோ கிராம் அம்பரை கொள்வனவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரிகளிடம் 150 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது மேற்படி இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் – தல்கஸ்கந்த மற்றும் கிரியுள்ள வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.