பியூமாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடராக அறியப்படும் ஹபுந்திரிகே டொன் பியும் ஹஸ்திக அல்லது “பியூமா” என்பவரை ஜனவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னணி பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், கொலைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சலிந்து மல்ஷிகா அல்லது குடு சலிந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சலிந்துவின் சீடர் என்று கூறப்படும் சந்தேக நபரான பியும் ஹஸ்திக மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை திறந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பியூமா என்ற சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தலின் பிரகாரம், சந்தேகநபர் 15.02.2024 அன்று டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.