வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரியில் சமர்ப்பிக்க நடவடிக்கை
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவு மீதான விவாதத்தை பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை 26 நாட்களுக்கு நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை (நான்கு சனிக்கிழமைகள் உட்பட) நடைபெற உள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.