தனது எக்ஸ் ஐடியின் பெயரை மாற்றிய எலான் மஸ்க்
டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் ஐடியின் பெயரை ‘கெகியஸ் மாக்சிமஸ்’ என்று மாற்றம் செய்துள்ளார். மேலும் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றியுள்ளார். பெபே தவளை மீமில் வரும் புகைப்படத்தை முகப்பு படமாக அவர் வைத்துள்ளார்.
எதற்காக எலான் மஸ்க் இந்த மாற்றத்தை செய்துள்ளார் என்று தெரியவில்லை. அதே சமயம் இந்த மாற்றத்திற்கு பிறகு கெகியஸ் எனும் மீம் நாணயத்தின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது. இணையத்தில் வைரலாக மீம்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் மீம் நாணயங்கள் கிரிப்டோ கரன்சி வகையை சார்ந்தது ஆகும்.
2000 ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் திரைப்படத்தின் நாயகனின் பெயர் மாக்சிமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.