ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மற்றுமொரு பிடியாணை!

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மற்றுமொரு பிடியாணை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா, அவரது இராணுவ ஆலோசகர், இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என மொத்தம் 12 பேரை கைது செய்ய உள்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது 500க்கும் மேற்பட்டோர் பங்களாதேஷ் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிலர் பல ஆண்டுகளாக இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய பின், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளித்து வருகின்றனர்.

இதனிடையே ஷேக் ஹசீனாவை நாடு கடத்தி, பங்களாதேஷிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )