இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

இடைநிறுத்தப்பட்ட பரீட்சை 10 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும்

வடமத்திய மாகாணத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 11ஆம் தரத்தில் விடுபட்டதாகக் கூறப்படும் பாடங்கள் தொடர்பான தவணைப் பரீட்சைகள் 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டதாக கூறப்படும் வினாத்தாள்கள் திருத்தப்படும் என அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமத்திய மாகாண அரச பாடசாலைகளில் இடம்பெற்ற 11ம் தர வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமையவே அது இடம்பெற்றுள்ளது.

வினாத்தாள்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று மாகாண கல்வி திணைக்களம் அனுராதபுரம் பொலிஸில் இரண்டு தடவைகள் முறைப்பாடு செய்திருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தர பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

தவணை பரீட்சையில் சிங்கள இலக்கியம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்ததன் காரணமாகவே இவ்வாறு பரீட்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

நிலைமையை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் நடைபெறவிருந்த 11ம் தர பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சர்களின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )