உள்ளாட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞையை நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்துசெய்து, புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
அதன்பிறகு மார்ச் மாதமளவில் தேர்தல் நடைபெறும் என நம்புகின்றோம். அத்தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
நாட்டு மக்கள் தற்போது உண்மையை உணர்ந்துள்ளனர். எனவே, உள்ளாட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதற்கான சமிக்ஞையை மக்கள் வெளிப்படுத்துவார்கள்.” என தெரிவித்துள்ளார்.