சட்டமா அதிபர் சேவைக்காலம் தொடர்பில் இன்று பரிசீலனை !
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை இன்று பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், அரசியலமைப்பு பேரவை இன்று பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
சட்டமா அதிபரின் சேவைக்காலம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இரண்டு தடவைகள் கூடிய போதிலும் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.
சட்டமா அதிபருக்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார்.
சட்டமா அதிபர் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.