இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 40ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆப்கானிஸ்தான் அணியை 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய தினம் பியூஸ்ஜோர் மைதானத்தில் (Beausejour Stadium) நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 98 ஓட்டங்களையும் ஜான்சன் சார்லஸ் (Johnson Charles) 43 ஓட்டங்களையும் ரோவ்மேன் பவல் (Rovman Powell) 26 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக குல்பாடின் நைப் (Gulbadin Naib) இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றனார்.
தொடர்ந்து 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓடங்காகிளை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) 38 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய் (Azmatullah Omarzai)
23 ஓட்டங்களையும் ரஷித் கான் (Rashid Khan) ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
பந்துவீச்சில் ஓபேட் மெக்காய் (Obed McCoy) 03 விக்கெட்டுகளையும் அகேல் ஹொசின் (Akeal Hosein) மற்றும் குடாகேஷ் மோதி (Gudakesh Motie) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது