இராணுவத் தளபதி – பாதுகாப்புச் செயலாளர் இடையில் சந்திப்பு
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (8) இடம்பெற்றது.
இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளருடன் நடத்தப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். இராணுவத்தை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் இராணுவத் தளபதியின் தலைமைத்துவத்தின் மீது பாதுகாப்புச் செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோவிற்கு பாதுகாப்புச் செயலாளர் வாழ்த்து தெரிவித்ததோடு, இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளருக்கு நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார்.