பகல் இடைவேளை வேண்டாம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிய உணவு நேரத்தில் எழுந்து செல்கின்றனர்
பாராளுமன்றத்தில் பகல் இடைவேளை வேண்டாம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிய உணவு நேரத்தில் எழுந்து சென்றதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று இடைவேளையின்றி பாராளுமன்ற விவாதத்தை தொடருமாறு கோரியதையடுத்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இணக்கப்பாட்டின் பிரகாரம் விவாதம் தொடர்ந்தது.
இதன்போது, எழுந்து நின்ற மகிந்த ஜயசிங்க, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சாப்பிடச் சென்றதை சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த நேரத்திலும் சென்று மதிய உணவு அருந்தும் சந்தர்ப்பம் உள்ளதாகவும், ஆனால் சபையின் அதிகாரிகளுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லை எனவும் அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.