ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை நீக்க முடிவு

ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை நீக்க முடிவு

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் தொகையை கடனாக பெற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை ஏற்று பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.

அதே சமயம் கடனை வழங்க பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் முதன்மையானது பாகிஸ்தான் அரசு தனது செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாகவும். எனவே செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் நிதி மந்திரி முகமது அவுரங்கசிப் “அரசு துறைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, 1½ லட்சம் வேலைகளை ஒழிக்க அரசு முடிவு செய்திருக்கிறது” என கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )