கனடா – பாகிஸ்தான் இன்று மோதல்

கனடா – பாகிஸ்தான் இன்று மோதல்

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பாகவுள்ளது.

குழுநிலை போட்டிகளில் இதுவரையில் 2 போட்டிகளை எதிர்கொண்டுள்ள கனடா அணி 1 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதேநேரம் 2 போட்டிகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த நிலையில் A குழுவிற்கான புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )