இரான் விக்கிரமரத்ன இராஜினாமா !
முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரான் விக்கிரமரத்ன ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ தொகுதி அமைப்பாளர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த பாரளுமன்ற தேர்தலில் இரான் விக்கிரமரத்ன 38,837 வாக்குகளை பெற்றுக்கொண்டாலும் பாராளுமன்றத்திற்கு
செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை
இதனால் அவரின் பெயரை கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தேசிய பட்டியலில் குறிப்பிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் தேசிய பட்டியலின் ஊடாகவும் இரான் விக்கிரமரத்னவிற்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த இராஜினாமா முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
ஐக்கிய மக்கள் சக்திக்குள் அண்மைக்காலமாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருகின்றது.
கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ள நிலையில், மேலும் சிலர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துவக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இன்னும் சிலர் கட்சி செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.