யாழில் கரையொதுங்கிய கண்ணன், ராதை சிலை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அண்மைக்காலமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்பட்டது.
இதன்போது இந்தோனேசியா, மலேசியா அல்லது இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இந்த சிலை வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எனவே, குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka