சீகிரியாவை இரவு நேரத்தில் பார்வையிட முடியாது

சீகிரியாவை இரவு நேரத்தில் பார்வையிட முடியாது

சீகிரியா கோட்டை இரவு நேர பயணத்திற்காக திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது.

இரவு நேர சுற்றுலாவுக்காக கோட்டை விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியது.  எனவே சீகிரியா இரவு நேரத்தில் பார்வையிட திறக்கப்படாது என்று அவர்கள் தெளிவுபடுத்தினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )