1,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
சுமார் 1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளதாகவும் இந்த கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகளை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாட்டிற்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.