இந்திய உயர் ஸ்தானிகர்- நாமல் ராஜபக்ச இடையே பேச்சுவார்த்தை
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா-இலங்கை இடையேயான பன்முகத்தன்மை கொண்ட பிரச்சினைகள், வளர்ச்சித் திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக உயர் ஸ்தானிகர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவும் வலுவான உறவைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து விவாதித்ததாக நாமல் ராஜபக்ச முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.