மஹிந்த ராஜபக்ச போரை முடித்தது போல, ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

மஹிந்த ராஜபக்ச போரை முடித்தது போல, ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

மஹிந்த ராஜபக்ச மூன்றாண்டுகளில் போரை முடித்தது போல, ஊழல், மோசடிகளுக்கு மூன்றாண்டுகளுக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி செயற்படும் முகாமே எமது அரசியல் கட்சியாகும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்புகளை கைவிடாத மற்றும் 30 வருட கால போரை முடித்த அரசியல் சக்தியே எமது கட்சி.

சூழ்ச்சிகள் மூலம் எமது சக்தியை தோற்கடிக்க முற்பட்டாலும் நாடு பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்கும் கட்சியே எமது கட்சியாகும். நான் ஜனாதிபதியாக தெரிவான பிறகு முதல் ஆறு மாதங்களுக்குள் அரச சேவை டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.

30 வருடங்களாக போரை மையப்படுத்தியே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மூன்றாண்டு காலப்பகுதிக்குள் மஹிந்த ராஜபக்சவே நாட்டுக்கு சமாதானத்தை பெற்றுக்கொடுத்தார். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார்.

மஹிந்த ராஜபக்ச தனது பொறுப்பை மூன்றாண்டுகளுக்குள் நிறைவேற்றியதால் தேர்தல் களத்தில் இருந்து சமாதானம் , சுதந்திரம் என்ற கோஷம் நீக்கப்பட்டது.

தேசிய பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, வெளிப்படை தன்மையுடன் விலை மனு கோரலை முன்னெடுத்து, வங்கி கட்டமைப்புக்கு வெளியில் நடைபெறும் விடயங்களை வங்கிக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, ஊழல், மோசடி என்ற கோஷம் அரசியல் களத்தில் இருந்து முற்றாக நீக்கப்படும்.

3 ஆண்டுகளுக்குள் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.
கொழும்பு துறைமுக நகர், தாமரைக் கோபுரம் உள்ளிட்ட திட்டங்கள் கூட தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே நிறுவப்பட்டன.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )