முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் இனிமேல் நடவடிக்கை எடுக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் நேற்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க  இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வீதியை பயன்படுத்துபவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வீதியில் பயணிக்கும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாதுஇந்தக் கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )