பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

பஸ்களை சோதனையிட பொலிஸாரின் விசேட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூரச் சேவை பேருந்துகளில் அவர்கள் பயணிப்பதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )