யாழில் கரையொதுங்கிய மர்ம வீடு ; 18 புத்தர் சிலைகள் மீட்பு

யாழில் கரையொதுங்கிய மர்ம வீடு ; 18 புத்தர் சிலைகள் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய வீடு வடிவிலான மிதவையில் இருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றனர்.

அண்மைக்காலமாக கடல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது. இதன்போது மியன்மாரில் இருந்து இந்த நினைவாலயம் வந்து இருக்கலாம் என நம்ப படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரவு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் அதில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும்,செப்பேடுகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட சில பொருட்கள் தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )