ஆரோக்கிய சிறப்புகள் நிறைந்த செவ்வாழை

ஆரோக்கிய சிறப்புகள் நிறைந்த செவ்வாழை

பொதுவாக வாழைப்பழம் என்றாலே மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். அதைதான் பெரும்பாலானோர் சாப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கிறது. தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

* சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது

செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம், எலும்பை வலுப்படுத்துகிறது.

* சருமத்தை பாதுகாக்கிறது

அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவீதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.

* ரத்தத்தை சுத்திகரிக்கிறது

செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* தலைமுடிக்கு நல்லது

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகு குறைகிறது. குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )