தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்க என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், திட்டமிட்ட குற்றவாளியான கொஸ் மல்லியின் நெருங்கிய உறவினரை சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் போது, துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (19) கைது செய்யப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
CATEGORIES Sri Lanka