🛑 Breaking News : கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை பூட்டு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (20) மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதேவேளை நாளை பாடசாலைகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறுமென மாகாண ஆளுநர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.