சகோதரர் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இன்று (22) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவமானது
சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனி முஹம்மது முசாமில் வயது (43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சகோதரர் (தம்பி) அவரிடம் பணம் தருமாறு கேட்டதாகவும் அதனை அவர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்டவர் அவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் பணிப்பின் பேரில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தினேஷ் (8656) தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.