ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரேன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

“உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் ஜனாதிபதிபாக இருந்திருந்தால், உக்ரேனில் போர் நடைபெற்றிருக்காது. ரஷ்யா ஒருபோதும் உக்ரேனுக்குள் சென்றிருக்காது. எனக்கு புதினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. அவர் பைடனை அவமதித்தார். மிகவும் எளிமை. அவர் மக்களை அவமதிக்கிறார். அவர் புத்திசாலி. அவர் புரிந்துகொள்கிறார். அவர் பைடனை அவமதித்தார்,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புதினை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், “அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன். பல லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

இது மிகவும் கொடூரமான சூழ்நிலை, தற்போது அவர்கள் வீரர்கள். பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், நகரங்கள் அழிக்கப்பட்டு இடிபாடு தளங்கள் போல காட்சியளிக்கின்றன,” என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )