ஹன்சிகாவின்  ‘காந்தாரி’ படத்தின் புதிய அப்டேட்

ஹன்சிகாவின் ‘காந்தாரி’ படத்தின் புதிய அப்டேட்

நடிகை ஹன்சிகா நடிக்கும் காந்தாரி திரைப்படத்தின் மேகிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ஆர் கண்ணன் தயாரித்து இயக்கும் இந்த படத்திற்கு முத்து கணேஷ் இசையமைக்கின்றார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

‘சின்ன குஷ்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘மஹா’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து பார்ட்னர், மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )