ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இலங்கை நேரப்படி, இன்றிரவு 11 மணியளவில் 33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதுடன், ஒலிம்பிக் கொடியும் ஏற்றப்படவுள்ளது.
முதன்முறையாக அரங்கத்துக்கு வெளியே ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், ஆறு கிலோ மீற்றர் நீளமான சென் ஆற்றில் படகுகளில் வீரர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இலங்கை சார்பில் நதீஷா தில்ஹானி, விரேன் நெத்தசிங்க, கங்கா செனவிரட்ன, கைய்ல் அபேசிங்க, தருஷி கருணாரட்ன மற்றும் அருண தர்ஷன ஆகிய 6 தடகள வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News
TAGS Olympic