ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் இன்று ஆரம்பம் ; இலங்கையில் மூவர் பங்கேற்பு
பாரிஸ் ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் இன்று (01) ஸ்டே டி பிரான்ஸ் அரங்கில் ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கையின் மூன்று வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கின் முக்கிய போட்டி நிகழ்வான தடகள போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் 48 போட்டி நிகழ்ச்சிகளில்
மொத்தம் 1,810 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
தடகள போட்டிகளில் இலங்கை சார்பில் முதல் போட்டியில் மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன முதல் பேட்டியில் பங்கேற்கவுள்ளார்.
ஹான்சூவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தரூஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆரம்பசுற்றில் நாளை (02) களமிறங்கவுள்ளார்.
தொடர்ந்து சர்வதேச ரீதியில் பதக்கம் வென்றிருக்கும் அருண
தர்ஷன முதல் முறையாக எதிர்வரும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டியில் களமிறங்குகிறார்.
அவர் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கேற்கிறார். ஹான்சூ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டில்ஹானி லேகம்கே எதிர் வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.