பிரிவினையாளரின் டொலருக்காகவே 13 நடைமுறை குறித்து பேசுகிறார்கள்!
தேர்தல் செலவினங்களுக்காக பிரிவினைவாதிகளிடமிருந்து டொலர் பெற்றுக்கொள்வதற்காகவே ரணில், சஜித், அநுரஆகியோர் வடக்குக்கு சென்று
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாகக் கூறுகிறார்கள் என்று உதய
கம்மன்பில தெரிவித்துள்ளார்.
195ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டின்போது தெற்கு சிங்களவர்களை காட்டிலும் வடக்கு தமிழர்களே பெருமளவில் மகிழ்ச்சியடைந்தார்கள்.
வடக்கில் வாழ்ந்த தமிழர்களில் ஒரு தரப்பினருக்கு கோயிலுக்குள் சென்று கடவுளை வணங்குவதற்கு சிங்கள புத்தாண்டு தினத்தன்றே அனுமதி வழங்கப்பட்டது.
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்னையை மூடி மறைக்கும் செயல்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று ‘சிங்களவர்களின் நெருக்கடியில் இருந்து விடுதலை பெற அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக’ குறிப்பிடுகிறார்கள்.
தேர்தல் செலவுகளுக்கு பிரிவினைவாதிகளிடமிருந்து டொலர் பெற்றுக்கொள்வதற்காக வடக்குக்கு சென்று இவர்கள் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், வடக்கில் இன்றும் சாதிய வேற்றுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து இவர்கள் கவனம் செலுத்தவில்லை. சாதிய வேற்றுமையால் வடக்கில் இன்றும் ஒதுக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்காக சமூக குறைப்பாடுகளை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவோம்.
வடக்கில் உள்ளவர்கள் தெற்கில் வாழ்கிறார்கள், தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் வாழ்கிறார்கள்.
தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்கள்.
இதனை காட்டிலும் நல்லிணக்கம் அவசியமா? உத்தேசஉண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்ததால் நாட்டில் மீண்டும் இரத்த வெள்ளம் ஓடும் நிலை ஏற்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.