பிராங்க் வீடியோவால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்
நண்பர்கள் அல்லது சாலையில் செல்லும் பொது மக்களிடையே ‘பிராங்க்’ செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதில், பிலிப்பைன்சை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடையில் அமர்ந்து கொண்டு தனது உதடுகள் மீது கம் (பசை) ஒட்டி விளையாடுகிறார். விளையாட்டுத்தனமாக அவர் அந்த செயலை செய்த போது பசை இறுக்கமாக உதடுகளில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் அந்த வாலிபர் வாயை திறக்க முயற்சித்த போது அவரால் திறக்க முடியவில்லை.
இதனால் அவர் அழுது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அதைப்பார்த்து அவரது நண்பர்கள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ 67 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், வாலிபர் உரிய பாடத்தை கற்று கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் என பதிவிட்டார்.