புறக்கோட்டையில் வெள்ளையாக்கும் கிரீம்கள் ; உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை
புறக்கோட்டை – கதிரேசன் தெருவில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்த கடைகள், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சிறப்பு சோதனைப் பிரிவால் நேற்று சோதனை செய்யப்பட்டன.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்காக, நுகர்வோர் விவகார அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka