பிரித்தானியாவின் இந்து பசுபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

பிரித்தானியாவின் இந்து பசுபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

பிரித்தானியாவின் இந்து பசுபிக் வலயத்துக்கான அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.

அவரது இந்த விஜயத்தின் போது பொருளாதார வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு, மனித உரிமைகள் மற்றும் தேசிய மறுசீரமைப்பு, அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை ஆதரிக்கும் ஒரு புதிய ஏற்றுமதி திட்டம் உள்ளிட்ட பல விடயங்களில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

குறித்த விஜயத்தின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிற உயர் அரசு அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாட கேத்தரின் வெஸ்ட் திட்டமிட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )