இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு உண்டு – சுப்பிரமணியன் சுவாமி
ராஜபக்ஷவின் பாரம்பரியம் இந்தியாவைக் குடும்பமாக ஏற்றுக்கொள்வ
தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக
நாமல் இணைந்தது வரவேற்கத்தக்கது என்று இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி நாமல்தனது பரப்புரையை ஆரம்பிக்கவுள்ள
தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு மாகாண அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் விடுத்த அறிக்கைக்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி,
மற்ற அண்டை நாடுகளின் தலைவர்களைப் போல் அல்லாமல் இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு இருக்கின்றது
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக ராஜபக்ஷ குடும்பத்தினர் அதிகம் வரவேற்கப்பட்டனர் என இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.