சட்டவிரோத சிகரெட் தொகை சிக்கியது

சட்டவிரோத சிகரெட் தொகை சிக்கியது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்க வருவாய் பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்களில் இந்த சிகரெட் தொகை மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

420,000 சிகரெட்டுகள் அந்த பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்கள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து களுத்துறை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதி சுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் மதிப்பு 31.5 மில்லியன் ரூபாய் என்று அவர் மேலும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )