செல்வம் அடைக்கலநாதன் பிரதமருடன் சந்திப்பு !

செல்வம் அடைக்கலநாதன் பிரதமருடன் சந்திப்பு !

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று சந்தித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எடுத்துரைத்ததுடன், அவர்களுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )