பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் !

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் !

புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ(Rey Mysterio) சீனியர் அவரது 66 வயதில் காலமானார்.

ரே மிஸ்டீரியோ உயிரிழப்பு அவரின் குடும்பத்தினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரே மிஸ்டீரியோவின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். ‘619’ என்கிற அடைமொழியுடன் WWE மல்யுத்த களத்தில் அவரின் சண்டை பிரபலமாக இருந்தது.

ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும்.

களத்தில் நேர்மையுடன் அதேநேரம் தனது வித்தியாசமான சண்டை நகர்வுகள் எதிராளிகளை நிலைகுலையச் செய்யும்.

ஆரம்பத்தில் மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்ற ரே மிஸ்டீரியோ, 1990-இல் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் ‘ஸ்டார்கேட்’ போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி இந்த இடத்தைப் பிடித்தார்.

பின்னர், WWE எனப்படும் வர்த்தக மல்யுத்தப் போட்டிகள் வந்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

கயிற்றின் மீது ஏறி உயரமாகப் பறந்து எதிராளிகள் மீது குதிக்கும் அவரது பாணி மிகவும் கவனம் ஏற்கப்பட்டது.

மல்யுத்த விளையாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட ரே மிஸ்டீரியோ, உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

மெக்சிகன் மல்யுத்தத்தை இன்று உலகமே அறிந்திருப்பதில் ரே மிஸ்டீரியோ மிகப்பெரிய பங்குண்டு.

பல சாம்பியன் பட்டங்களை வென்ற ரே மிஸ்டீரியோ, மல்யுத்தப் பயிற்சியாளராக தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

அவரின் மகன் எல் ஹிஜோ டி ரே மிஸ்டீரியோ மற்றும் அவரது மருமகன் போன்றோர் வந்தாலும், ரே மிஸ்டீரியோ அளவுக்கு யாராலும் புகழை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில் தான் அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )