யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜரானார்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.