பென்சில் மற்றும் வர்ண பூச்சுகள் தொடர்பில் எச்சரிக்கை

பென்சில் மற்றும் வர்ண பூச்சுகள் தொடர்பில் எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
 
பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்காக வெவ்வேறு இரசாயனங்களும் உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மஹிந்த விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
 
அவற்றைக் கொள்வனவு செய்யும் போது இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ, தரமற்ற வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )