சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
வருடம் ஆரம்பித்து 22 நாட்களில் 177,400 இக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து 30,847 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 25,608 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,959 பேரும் ஜெர்மனியிலிருந்து 10,873 பேரும் சீனாவிலிருந்து 9,337 பேர், பிரான்சிலிருந்து 8,340 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 6,851 பேரும் அமெரிக்காவிலிருந்து 5,202 பேரும், போலந்திலிருந்து 5,194 பேரும் நெதர்லாந்திலிருந்து 4,708 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.