பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 120 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களையும் பெற்றன.
அதேநேரம், இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்று, 254 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
அதற்கமைய, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 க்கு 1 என சமநிலையில் முடிவடைந்துள்ளது.
CATEGORIES Sports News