கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தனது கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு படிவமொன்றையும் வெளியிட்டுள்ளார்.