பொருளாதாரம் உட்பட எல்லா வழிகளிலும் வீழ்ச்சியடைந்த நாடொன்றே எமக்கு கிடைக்கப்பெற்றது
ஆட்சியை பெறுவதற்கு பாடுபட்டது போல் அதனை தக்கவைத்துக்கொள்வதற்கு பல மடங்கு பாடுபட வேண்டும். இந்நாட்டை கட்டியெழுப்பும்வரை நாம் ஓயமாட்டோம். ஆட்சியைக் கைவிட மாட்டோம். என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற படை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ பொருளாதாரம் உட்பட எல்லா வழிகளிலும் வீழ்ச்சியடைந்த நாடொன்றே எமக்கு கிடைக்கப்பெற்றது. சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளையும் சீர்செய்ய வேண்டியுள்ளது.
நாம் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்று சுகபோகம் அனுபவிக்கவில்லை. நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னுரிமையளித்து செயல்பட்டுவருகின்றோம். பல இன்னல்களுக்கு மத்தியில்தான் ஆட்சியைப் பொறுப்பேற்றோம். அதனை எவ்வளவு எளிதில் விட்டுவிடத் தயாரில்லை. நாம் ஆட்சியை கைவிட தயாரில்லை. நாட்டை கட்டியெழப்பிவிட்டுதான் விடைபெறுவோம்.
எமக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவற்றுக்கு அஞ்சக்கூடாது. கிராம மட்டங்கள் உட்பட அனைத்து மட்டங்களுக்கும் சென்று உண்மையை மக்களிடம் தெளிவுபடுத்துங்கள்.
பாதாள குழுக்கள், போதைப்பொருள் வியாபாரிகளிடம் நாம் அடிபணியப்போவதில்லை. பஸில் ராஜபக்ச எங்கே? மாயமாகியுள்ளார். அவர்கள்தான் அச்சப்பட வேண்டும். உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலும் தேசி ய மக்கள் சக்திக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.