டொட்டென்ஹாமை வென்ற லிஸ்டர்

டொட்டென்ஹாமை வென்ற லிஸ்டர்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிஸ்டர் சிற்றி வென்றது.

லிஸ்டர் சார்பாக ஜேமி வார்டி, பிலால் எல் கன்னூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிஷலிஷன் பெற்றார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 53 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. 47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 44 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றன.

நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, நியூகாசில் யுனைட்டெட் ஆகியன தலா 41 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், ஐந்தாமிடத்தில் நியூகாசிலும் காணப்படுகின்றன.

இதில் மற்றைய அணிகளை விட லிவர்பூல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )