ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவர் இடையில் சந்திப்பு
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்டின் பிரத்தியேக செயலாளர் திரு.ரோப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்ஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருண, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.