இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5ஆவது மற்றும் இறுதி டி20 போட்டி மும்பையில் நேற்று (2) நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.
248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவரில் 97 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுடன் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.