அம்பலாந்தோட்டையில் மூவர் கொலை ; 5 பேர் கைது
அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக நேற்று (02) மேற்படி கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka