18 ஆம் திகதி கூடுகிறது கோப் குழு

18 ஆம் திகதி கூடுகிறது கோப் குழு

கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தடவையாக கூடவுள்ளதாகவும் முதல் நாளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினருக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும். எவ்வாறாயினும், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இதுவரை எவரும் பெயரிடப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )