ஒரே நாளில் இரண்டு நாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய தசுன் சானக்க
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்க ஒரே நாளில் இரண்டு நாடுகளில் அபார திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு போட்டியொன்றிலும், டி-20 லீக் போட்டியொன்றிலும் சானக்க அபார திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சானக்க இலங்கையில் கழக மட்டப் போட்டித் தொடர் ஒன்றில் எஸ்.எஸ்.சீ கழகத்தின் சார்பில் 123 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்தப் போட்டியின் பின்னர் உடனடியாக விமானத்தில் ஏறி டுபாய் சென்ற சானக்க அதே தினத்தில் அங்கு நடைபெற்ற டி-20 போட்டியொன்றிலும் விளையாடியுள்ளார்.
டுபாய் கெப்பிடல்ஸ் கழகத்தின் சார்பில் விளையாடிய சானக்க 12 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
CATEGORIES Sports News